பிக்பாஸ் 6வது சீசன் முதல் எலிமினேஷன் இவர்தான்!!.. அறிவித்த கமல்.!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Kamalhassan announced first elimination in Bigg Boss 6 Tamil

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

Kamalhassan announced first elimination in Bigg Boss 6 Tamil

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார் GP முத்து.

Kamalhassan announced first elimination in Bigg Boss 6 Tamil

இதனிடையே நேற்று பிக்பாஸ் போட்டியில் கமல் தோன்றி போட்டியாளர்களிடம் உரையாடினார். அதைத் தொடர்ந்து இன்றும் கமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவது யார் என்ற விபரங்களை அவர் வெளியிட்டார். அதன்படி மெட்டி ஒலி சாந்தி இந்த வாரத்தில் எலிமேனேஷனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஏற்கனவே GP முத்து வெளியேறிய நிலையில், தற்போது மெட்டி ஒலி சாந்தி எலிமினேட் ஆகியிருப்பதால் தற்போது பிக்பாஸ் வீட்டினுள் 19 போட்டியாளர்கள் உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.