கமலிடம் சொல்லிவிட்டு வெளியேறினார் GP முத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் GP முத்து. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 தினந்தோறும் நடைபெறும் பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த சீஸனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக இந்த சீஸனின் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட GP முத்து தனது குடும்பத்தினரிடம் பேசும்போது கண்கலங்கிவிடுகிறார். எப்போதும் கலகலப்பாக வலம்வரும் GP முத்து, சக போட்டியாளர்களிடமும் ஜாலியாகவே உரையாடி வருகிறார்.
அவருடைய வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இதனிடையே அவர் குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தினந்தோறும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அதே நேரத்தில் தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்கமுடியவில்லை என தெரிவித்துவந்த GP முத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவதாக கமலிடம் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார் GP முத்து. துவக்கம் முதலே, பெரும் ரசிகர்களை கொண்டிருந்த முத்து, போட்டியில் இருந்து வெளியேறியதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை