ஆசியாவின் 50 சுவையான தெரு உணவுகளில் இலங்கை அச்சாறும் அப்பமும் உள்ளன- சிஎன்என் அறிக்கை!

உள்ளூர் வாசனைத்திரவியங்கள், மிளகாய், மஞ்சள், சீனி மற்றும் உப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும், இலங்கை அச்சாறு சிறந்த தெரு உணவாகும். இது பிராந்தியத்துக்கு பிராந்தியம் மற்றும் பருவத்துக்கு பருவம் சுவை மாறுபடும்.

வெரலுவாகவோ, விளாம்பழமாகவோ அன்னாசிப்பழமாகவோ, மாம்பழமாகவோ அல்லது அம்பரெல்லாவாகவோ இருக்கலாம் என்று சிஎன்என் செய்தி அறிக்கையிட்டுள்ளது.

மேலும், காலை உணவாக அப்பம் நல்லது என்று சிஎன்என் செய்திச் சேவை கூறுகிறது.

சாதாரண அப்பம் மற்றும் முட்டை அப்பம் பொதுவாக சட்னி, தேங்காய் சாம்பல் மற்றும் பல வகையான கறிகளுடன் நன்றாக இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.