ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான வெளியான மகிழ்ச்சி தகவல்!!

ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான புதிய தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.

அத்துடன், வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் குடியுரிமை கோரவேண்டுமானால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.

 

புதிய விதி

ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான வெளியான மகிழ்ச்சி தகவல் | Germany Citizenship New Update

அதையும் மாற்றி, மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தால் போதும், ஆனால், ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழ்ந்திருக்கவேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட உள்ளது.

இப்போதைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றிலிருந்து ஜேர்மனியில் வாழ வருவோர் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமைகள் வைத்திருக்கலாம் என்ற நிலை உள்ளது. எனினும் , அந்த விதியையும் மாற்ற புதிய அரசு வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.