17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு தாக்குதல்..! தீபாவளியன்று யாழில் சம்பவம்

யாழில் 17 வயது சிறுவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை மூன்று மணியளவில் இணுவில் கலாஜோதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரும்பிராயை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் என்ற பாடசாலையில் இருந்து இடை விலகி பான்சிப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் 17 வயதுச் சிறுவனே இத்தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு தாக்குதல்..! தீபாவளியன்று யாழில் சம்பவம் | Sword Attack In Jaffna Crime Police Investigation

இணுவில் கலாஜோதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உறவினர் வீட்டுக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று சிறுவன் வீடு திரும்பும் போது,

தெல்லிப்பழையிலிருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 பேர் கொண்ட குழுவே வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தலையிலும், கையிலும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த வாள்வெட்டு தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.