அமெரிக்க திறைசேரி அதிகாரி இலங்கை வந்தடைந்தார்

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று (25) இலங்கை வந்தடைந்தார்.


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் செய்தியில் இது குறித்து, ரொபர்ட் கப்ரோத் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் மற்றும் பொருளியல் தலைவர்களைச் சந்திப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சியில் முன்னோக்கிச் செல்லும் வழி குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.