மியான்மர் அழகி கனடாவுக்கு தப்பியோட்டம்: காரணம் என்ன தெரியுமா?
மியான்மர் அழகிப்போட்டியில் வெற்றிபெற்ற அழகிய இளம்பெண் ஒருவர் கனடாவில் புகலிடம் கோர உள்ளார்.
அவரது தாய்நாட்டில், ஆளும் இராணுவ ஆட்சியாளர்களால் அவருக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
மியான்மர் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவரான Han Layக்கு அவரது தாய்நாட்டில், ஆளும் இராணுவ ஆட்சியாளர்களால் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
ஆகவே, தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்திருந்த Han Lay கனடாவுக்குத் தப்பியோடியுள்ளார்.
அவர் கனடாவில் புகலிடம் கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Han Layக்கும் மியான்மர் இராணுவத்துக்கும் என்ன பிரச்சினை?
2021ஆம் ஆண்டு, அழகிப்போட்டியின் இறுதிப்போட்டின்போது உணர்ச்சிகரமான உரை ஒன்றை ஆற்றிய Han Lay உலகின் கவனம் ஈர்த்தார்.
ஆளும் இராணுவ ஆட்சியாளர்களின் அராஜகங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதற்காக ‘மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கூறும் பதாகை ஒன்றை ஏந்தி Han Lay நிற்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின.
Han Layயின் உரையைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வரத்துவங்கின. ஆகவே, அழகிப்போட்டி ஒன்றிற்காக தாய்லாந்து சென்ற Han Lay, பின்னர் நாடு திரும்புவதில்லை என முடிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து, Han Lay தாய்லாந்திலும் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.
இந்நிலையில், Han Lay, கனடாவுக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு அரசியல் புகலிடம் கோர உள்ளதாகவும், தாய்லாந்து புலம்பெயர்தல் அமைப்பின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Han Layக்கு சில சர்வதேச தொண்டு நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை