மயிரிழையில் 173 பயணிகளுடன் பாரிய விபத்தில் தப்பிய விமானம்
அடைமழை காரணமாக விமானத்தை தரையிறக்க, பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் விமானம் புல்வெளிக்குள் நழுவிச்சென்றுள்ள நிலையில் மயிரிழையில் 173 பயணிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
இந்த சம்பவம் (23.10.2022) பதிவாகியுள்ளது.
தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் பயணித்த விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
தற்காலிகமாக மூடப்பட்ட மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம்
இதையடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அப்போது, அங்கு கடும் மழை பெய்துகொண்டிருந்ததால் 2 முறை விமானத்தை தரையிறக்க மேற்கொண்ட விமானியின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறக்க முற்பட்டதாகவும் அப்போது, கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் விமான ஓடுதளம் வழுவழுப்புடன் காணப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக மக்கள் வெளியேற்றம்
இந்நிலையில், விமானத்தை விமானி தரையிறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்வெளிக்குள் பாய்ந்துள்ளது.
இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் உட்பட 173 பேரும் அவசரகால வழியாக விமானத்தில் இருந்து வெளியேறி தப்பித்துள்ளனர். இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை