விபத்தில் உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்
உலக புகழ்பெற்ற ஹொலிவூட் ஆங்கில திரைப்பட நகைச்சுவை நடிகர் லெஸ்லி ஜோர்டன் உயிரிழந்துள்ளார்.
67 வயதான ஜோர்டன் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலை நடந்த வாகன விபததில் மரணமடைந்துள்ளார்.
கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம்
NBC
“Will and Grace” மற்றும் “American Horror Story” போன்ற ஆங்கில திரைப்படங்கள் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். ஜோர்டன் பயணித்த அவரது கார் வீதியில் வழுக்கி சென்று கட்டடம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வோர்னர்ஸ் பிரதர்ஸ் கலையகத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.
கோவிட் -19 தொற்று நோய் காலத்தில் ஜோர்டன் சமூக ஊடகங்கள் மூலம் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்ததுடன் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை