ரிஷி சுனக் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் பிரித்தானியர்களின் மறுபக்கம் United Kingdom Rishi Sunak
பிரித்தானியாவின் பிரதமராகவிருந்த லிஸ் ட்ரஸ், பதவி விலகுவதாக அறிவித்த நிலையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, மன்னரிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று ரிஷி சுனக் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்று நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் மன்னர் மூன்றாம் சார்லஸினால் நியமிக்கப்பட்டார்.
குவியும் ஆதரவு
அந்த வகையில், பிரித்தானியாவின் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு பலர் ஆதரவினை வெளியிட்டு வரும் நிலையில், மறுப்பக்கம் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் உள்ள அனைத்து முக்கிய செய்தித்தாள்களிலும் ரிஷி சுனக் முதல் பக்கத்தில் இடம்பிடித்திருந்த நிலையில், “ஒன்றுபடுங்கள் அல்லது இறந்துவிடுங்கள்”, இரண்டு மாதங்களுக்குள் மூன்றாவது கன்சர்வேடிவ் பிரதம மந்திரி, ஆறு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமர்” நாட்டை வழிநடத்தும் முதல் இந்துவாகவும் சரித்திரம் படைப்பார்” , “பிரிட்டனுக்கு ஒரு புதிய விடியல்” “படை உங்களுடன் இருக்கிறது, என பல்வேறு கருத்துக்களை கூறி பாராட்டி வருகின்றனர்.
கடுமையான விமர்சனம்
மறுப்பக்கம் , “எங்களின் புதிய (தேர்வு செய்யப்படாத) பிரதமர். உங்களுக்கு வாக்களித்தது யார்? “மன்னரை விட இரண்டு மடங்கு பணக்காரர்” “ஜனநாயகத்தின் மரணம்” என்றும் தலைப்பில் விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரித்தானியாவின் பிரதமராகியுள்ள ரிஷி சுனக்கின் தாத்தா, பாட்டி மட்டும் தான் பிரிட்டிஷ் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
இருப்பினும், ரிஷி சுனக்கைப் பற்றி பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் சிலர் அவர் மீது உரிமை கோருமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. என்ற போதும் இந்தியர்கள் அவரை இந்திய வம்சாவளி என்று உரிமை கோருகின்றனர்.
மேலும், ரிஷியின் மனைவி இந்தியாவின் பில்கேட்ஸ் என்று அழைக்கப்படும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை