கனடாவில் ஈழத் தமிழர் இருவருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்..! ஒரே நாளில் கோடீஸ்வரர்கள்!!
கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.
கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரில் வசிக்கும் விக்கினேஸ்வரராஜா அமிர்தலிங்கம் (Vikneswararajah Amirthalingam) மற்றும் பரம்சோதி கதிர்காமு (Paramsothy Kathirgamu) ஆகிய இருவருக்குமே இந்த பரிசு விழுந்துள்ளது.
குறித்த இரண்டு நபர்களும் சுமார் 10 வருட கால நண்பர்கள் ஆவர். அத்துடன், இருவரும் நீண்ட காலமாக லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அழகான தீபாவளி கொண்டாட்டம்
இந்த நிலையில், குறித்த இருவருக்கும் லொட்டோ மேக்ஸில் $100,000 பரிசு விழுந்துள்ளது.
விக்கினேஸ்வரராஜா தான் பரிசு விழுந்ததை முதலில் கண்டுபிடித்துள்ளார். அவர் கூறுகையில், நான் பரிசு விழுந்ததை உறுதி செய்ததையடுத்து அதிர்ச்சியும் உற்சாகமும் ஒருசேர அடைந்தேன். பின்னர் உடனடியாக பரம்சோதிக்கு தொலைபேசியில் அழைத்து வர சொன்னேன் என கூறியுள்ளார்.
பரம்சோதி கூறுகையில், விக்கினேஸ்வரராஜா தகவல் சொன்னவுடன் உடனே gas stationக்கு ஓடினேன், பரிசு விழுந்தது மிகவும் ஆச்சரியம் கொடுக்கிறது. தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட அழகான வழி என கூறியுள்ளார்.
பரிசு பணத்தை தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்வதோடு, நன்கொடை வழங்கவும் விக்கினேஸ்வரராஜா திட்டமிட்டுள்ள நிலையில் முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் மனைவியுடன் பகிர்ந்து கொள்ள பரம்சோதி திட்டமிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை