டுவிட்டர் முன்னாள் தலைமை அதிகாரிக்கு வழங்கப்படவுள்ள நூற்றுக்கணக்கான கோடி இழப்பீடு!
எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து அவர் டுவிட்டர் நிறுவன ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதனையடுத்து தனது புதிய நிறுவனத்தில் பல மாற்றங்கள் கொண்டு வர முடிவுசெய்ததன் எதிரொலியாக சில மணி நேரங்களில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.,) பராக் அகர்வால் மற்றும் நிதி அதிகாரி நெட் ஜெகல், சட்ட நிர்வாகி விஜயா காடே, பொது ஆலோசகர் சின் எட்ஜெட் ஆகிய 4 முக்கிய அதிகாரிகளை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார்.
இழப்பீடு
அதைத்தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். இதில் முக்கிய அதிகாரியாக பதவி வகித்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இந்தியாவை சேர்ந்தவர்.
இவர் கடந்த 2017ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆண்டு (2021) நவம்பர் தலைமை நிர்வாக அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.
ஒப்பந்தம்
இந்த சூழ்நிலையில் டுவிட்டரின் புதிய அதிபரான எலான் மஸ்க் அவரை நிறுவனத்திலிருந்து நீக்கி உள்ளார். டுவிட்டர் நிறுவன ஒப்பந்தத்தின்படி ஒரு ஆண்டுக்குள் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பராக் அகர்வாலுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 346 கோடி வழங்க வேண்டும். ஆகவே இந்த தொகையினை டுவிட்டர் நிறுவனம் அவருக்கு வழங்க உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை