நாளை முதல் மீண்டும் மழை
நாளை (29.10.2022) முதல் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.
அத்துடன் இது சில நாட்களுக்கு தொடரும் சாத்தியமும் உள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் நாளை (29.10.2022) முதலும்,
கல்முனை, பொத்துவில் போன்ற பகுதிகளில் நாளை மறுதினமும் (30.10.2022) மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.
இதே போன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பகுதிகளில் நாளை (29.10.2022) தொடக்கமும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறு தினமும் (30.10.2022) மழை ஆரம்பிப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகின்றது.
இதேபோன்று புத்தகம் மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை மறுதினம் முதல் மழைப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை