65 ஓட்டங்களால் இலங்கையை வென்ற நியூஸிலாந்து அணி
டி 20 உலகக் கிண்ண தொடரின் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
நியூஸிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் சதம் அடித்தார்.64 பந்துகளை எதிர்கொண்டு 104 ஓட்டங்களைப் பெற்றார்.
168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களை தசுன் சானக்க(35), பானுக ராஜபக்ஷ(34) பெற்றுக்கொடுத்தனர்.
ஏனைய இலங்கை அணி வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்து வீச்சில் நியூலாந்து அணியின் டிரென்ட் போல்ட் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும்
மிட்செல் சான்ட்னர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
கருத்துக்களேதுமில்லை