உலக வல்லரசு இராணுவ சக்திகளின் விளையாட்டு மைதானம் இதுவல்ல – இந்தியாவிற்கு ரணில் கடும் வலியுறுத்தல்!
கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல்சார் இராஜதந்திரத்தை மற்ற பெருங்கடல்களுடன் இணைவதற்கு மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் மோதலுக்குரிய பகுதியாகவோ அல்லது விளையாட்டு மைதானமாகவோ இருக்கக் கூடாது என சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இராணுவ கூட்டணியில் பங்கேற்காது
இதேவேளை சிறிலங்கா எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் பங்கேற்காது என்றும், பசுபிக் பிராந்தியத்தின் பிரச்சனைகள் இங்கு வருவதை விரும்பவில்லை என்றும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் உலக வல்லரசுகளின் போட்டியிலிருந்து இலங்கை எப்போதுமே விலகி இருக்கும் என்றும் இந்தப் போட்டிகள் எதுவும் இந்தியப் பெருங்கடலில் மோதலுக்கு வழிவகுக்காது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை