மொட்டு கட்சிக்கு இனி எழுச்சி இல்லை-மைத்திரிபால சிறிசேன எம்.பி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாடு அமைதியடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணி புதிய பொறுப்பாளர்கள் தெரிவு நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் சுதந்திர கட்சி தனிக்கட்சியாக போட்டியிட முடியாது எனவும், அடுத்த தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார். மொட்டு கட்சியின் தலைவர்கள் மீண்டும் எழுச்சி பெற முடியாது, ஆனால், மேடையில் யார் வேண்டுமானாலும் ஏறலாம் , இது அரசியல் எழுச்சி அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை