பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது குண்டு வீச்சு – ஒருவர் தற்கொலை
பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோவர் துறைமுகத்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் மையம் மீது பெட்ரோல் குண்டுகளுடன் பட்டாசுகளை இனைத்து வீசி விட்டு, பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சாட்சிகள் கூறியுள்ளன.
ஒரு வெள்ளை நிற SEAT ஸ்போர்ட்ஸ் காரில் கோடு போட்ட சட்டை அணிந்துவந்த அந்த ‘வெள்ளைக்காரர்’ டோவர் துறைமுகத்தில் உள்ள புதிய பிரித்தானிய குடிவரவு எல்லைப் படை மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அவர் வெளியே வந்து மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசினார், அதில் ஒன்று வெடிக்கவில்லை என்று புகைப்படக் கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, அருகில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு தனது காரை ஓட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சில நிமிடங்களில் காவல்துறையினர் வந்து அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உள்ளூர் காவல்துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.
அனால், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் தீப்பிடித்ததால் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.
கருத்துக்களேதுமில்லை