விளையாட்டாக கூட இதை செய்யாதீங்க! நடிகை ரம்பா வெளியிட்ட உருக்கமான காட்சி
நடிகை ரம்பா
நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாக 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது க்யூட் நடிப்பால் உருவாக்கினார்.
2010ம் ஆண்டு இலங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றவர்கள், மகன் பிறந்த பின்பு மீண்டும் திரும்ப சேர்ந்து வாழ விரும்பிய நிலையில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
வைரல் வீடியோ
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் அண்மையில், நடிகை மீனாவின் வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து சென்னையில் அவருக்கு சொந்தமான பேக்டரியில் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தனது பதிவில் நெகட்டிவாக பேசாதீர்கள். ஜோக்காக கூட இதை செய்ய வேண்டாம். உங்களுடைய உடல் இதற்கான வித்தியாசத்தை அறியாது. நாம் பேசும் வார்த்தைகளை பாசிட்டிவாக மாற்றிக் கொண்டால் நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக மாறும் என ரசிகர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை