தென்கொரியாவில் இலங்கையரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு

தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த 33 வயதுடைய இலங்கையர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

பேரலபனாதர, கெகுந்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சமீர மதுஷான் அபேவர்தன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே துரதிஷ்டவசமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தென்கொரியாவில் இலங்கையரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு | Sri Lankan Died In South Korea

 

கடலில் விழுந்து உயிரிழப்பு

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரியாவில் வேலைக்காக சென்றிருந்ததாகவும், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது கயிற்றில் சிக்கி கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்கொரியாவில் இலங்கையரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு | Sri Lankan Died In South Korea

 

உயிரிழந்த நபர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் ஊர்பொக்க பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.