நினைத்ததைவிட நோய்க்கொடுமை கடுமையாக இருக்கு.. சமந்தாவை தாக்கிய அரிய வகை நோய்.. தப்பிப்பது எப்படி?

சென்னை: நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாகவே மயோசிட்டிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு அது தொடர்பான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என அவர் நினைத்த நிலையில், அவர் நினைத்ததை விடவும் குணமாக இன்னும் நாள் ஆகும் என தெரிந்த உடனே தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்த எச்சரிக்கை மணியை சமந்த அடித்துள்ளார். அரிய வகை நோயான இந்த மயோசிட்டிஸ் அதிகளவில் பெண்களை தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோயால் அவதிபடும் சமந்தா எப்போதும் தைரியமாக இருக்க வேண்டியதில்லை என்பதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறேன். நோயின் பாதிப்பை ஏற்றுக்கொள்ள இன்னும் கடினமாக உள்ளது. நான் விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என மருத்துவர்கள் முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

குணப்படுத்த முடியும் தசை அழற்சி நோயை தடுக்க முடியாது என்றாலும், சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை தொடங்கினால், மயோசிட்டிஸ் எனப்படும் தசை அழற்சியை நிச்சயம் குணப்படுத்தலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.