335 பயணிகளுடன் இலங்கை வந்த அஸூர் ஏர் விமானம்!
ரஷ்யாவின் அஸூர் எயார்லைன்ஸ் நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ZF1611 என்ற விமானம், 335 பயணிகளுடன் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், இன்று (03) காலை 9.45 அளவில் இலங்கையை வந்தடைந்தது.
இன்று முதல் இலங்கைக்கான தனது சேவைகளை ஆரம்பித்துள்ள ரஷ்யாவின் அஸூர் எயார்லைன்ஸ் விமான சேவை, சென். பீட்டர்ஸ்பர்க் (Saint Petersburg), கிறஸ்நாயஸ்க் (Krasnayask), நொவொசெர்பியா (Novoserbia) ஆகிய இடங்களிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு சேவைகளை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
மொஸ்கோவில் இருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் அஸூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இலங்கைக்கு சேவைகளை முன்னெடுக்கும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை