வாக்குமூலம் வழங்க வராவிட்டால் சட்ட நடவடிக்கை !
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலி மீதான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள இரு நடிகைகள் இன்று முன்னிலையாகவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு நடிகைகளுக்கும் கடந்த 31ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அவர்கள் அன்றைய தினம் சமுகமளிக்காத நிலையில், குறித்த இருவரும் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இன்று பிற்பகல் வரை அவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்க வரவில்லை.
முன்னதாக, அந்த விசாரணைகள் தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்காக 4 நடிகர்கள், நடிகைகள், அறிவிப்பாளர்கள் மற்றும் பலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை