கொடிகாமம் பிரதேசசபையால் இரண்டாம் கட்டமாக வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது
சாவகச்சேரி நிருபர்
பெண்கள் அபிவிருத்தி நிதியம் ஊடாக கொடிகாமம் பிரதேசசபையின் பெண் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலமாக 28/10 வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்டமாக 10பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேசசபையில் தவிசாளர் க.வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சபையின் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 10பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவியாக 10நல்லின ஆடுகளை வழங்கி வைத்திருந்தனர்.
பெண்கள் அபிவிருத்தி நிதியத்தின் நிதி ஒதுக்கீடு மூலமாக கடந்த வாரமும் 10பயனாளிகளுக்கு சாவகச்சேரி பிரதேசசபை ஊடாக வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை