விடுதலைப்புலிகளின் பெயரில் சிறிலங்கா அரச ஆதரவுடன் இயங்கும் போலிக்கட்டமைப்பு – இந்தியாவிற்கு எச்சரிக்கை!
இலங்கையில் சிறிலங்கா அரச ஆதரவுடன் விடுதலைப்புலிகளின் பெயரில் இயங்கும் போலியான கட்டமைப்புகள் மக்களை குழப்பி வருவதாக தமிழகத்தில் கவிஞர் காசிஆனந்தன் தலைமையில் இயங்கும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சில தமிழர் அமைப்புகள் தாயக விடுதலையை நேசிக்கும் தமிழ் மக்களை குழப்பி வருவதான குற்றச்சாட்டைத் தொடுத்துள்ள ஈழத் தமிழர் நட்புறவு மையம், இந்த நிலைக்கு சிறிலங்கா அரசாங்கமும் அதனுடன் இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முக்கிய பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் புதிது புதிதாக உருவாகும் சில தமிழ் அரசியல் அமைப்புகள் சிறிலங்கா புலனாய்வு அமைப்பு மற்றும் புலம்பெயர் நாடுகளின் சில புலனாய்வு அமைப்புக்களுடன் இணைந்துகொண்டு தமிழர் தாயகத்தின் விடுதலைக் கொள்கைகளை களங்கப்படுத்துவதாகவும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி போலியாக இயங்கும் சில குழுக்கள் போதைப்பொருள் வணிகம் உட்பட்ட சமுக சீரழிவு செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
அதேபோல போலியான தமிழ் அரசியல் குழுக்களுடன் இந்திய அரசாங்கம் தொடர்பாடல்களை பேணுவதை தவிர்க்கவேண்டுமெனவும் கோரியுள்ளது.
இந்த விடயத்தை இந்தியா கணக்கில் எடுக்காமல் செயற்பட்டால் ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் கசப்பும் விரக்கதியுமே எஞ்சும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை