இம்ரான் கான் மீது தாக்குதல்..! துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயம் – தாக்குதல்தாரி பலி (காணொளி இணைப்பு )
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு படுகொலை முயற்சி என்றும், இம்ரானின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற பேரணியிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேரணியானது தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு திடீர் தேர்தல் கோரி இடம்பெற்றமையும் அதற்கு இம்ரான் கான் தலைமை தாங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை