தோனி ‘GUESS’ பண்ணது நடந்துரும் போலயே”..ஆறு வருசத்துக்கு முன்னாடி கோலி பத்தி சொன்ன ‘விஷயம்’.. வைரல் வீடியோ!!

ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பைத் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணிக்கு ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது.

இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் மூன்றில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி கண்டுள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து மாற்று வங்கதேச அணிகளை வீழ்த்தி இருந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது.

தொடர்ந்து, தங்களின் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை நாளை மறுநாள் (06.11.2022) சந்திக்க உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, நான்கு போட்டிகளில் மூன்று அரை சதங்களுடன் 220 ரன்கள் சேர்த்து நல்ல ஃபார்மில் உள்ளார். மேலும் ஒட்டுமொத்த டி 20 உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் விராட் கோலி தான் முதலிடத்தில் உள்ளார்.

ms dhoni about virat kohli performance in adelaide before 6 years

அடிலெய்டு மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த கோலி, 64 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு மைதானத்தில் கோலி ஆடுகிறார் என்றாலே ரசிகர்கள் உச்சகட்ட குதூகலம் அடைந்து விடுவார்கள். இதற்கு காரணம், அடிலெய்டு மைதானத்தில் கோலி ஆடியுள்ள பல அசத்தலான இன்னிங்ஸ்கள் தான்.

தான் அடித்துள்ள 71 சதங்களில் அதிகபட்ச சதத்தை (5 சதங்கள்) அடிலெய்டு மைதானத்தில் தான் கோலி அடித்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் விராட் கோலியின் முதல் டெஸ்ட் சதமும் அடிலெய்டு மைதானத்தில் தான் பதிவானது . மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 14 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள், 3 அரை சதங்கள் உட்பட 904 ரன்களை அடிலெய்டு மைதானத்தில் சேர்த்துள்ளார் விராட் கோலி.

ms dhoni about virat kohli performance in adelaide before 6 years

இதனிடையே, விராட் கோலி மற்றும் அடிலெய்டு மைதானத்தை ஒப்பிட்டு பல ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பேசி இருந்த விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சிறப்பாக ஆடும் கிரிக்கெட் வீரரை ஒரு மைதானத்தின் பெயராக அல்லது அங்குள்ள ஒரு பகுதிக்கு அவருடைய பெயரை சூட்டுவது என்பது வழக்கமான ஒன்று தான்.

அப்படி அடிலெய்டு மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த கோலியின் பெயரை அந்த மைதானத்தின் ஒரு பகுதிக்கு மைதான நிர்வாகம் சூட்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு தோனி கூறி இருந்தார். இன்று வரை அதை மெய்ப்பிக்கும் வகையில் அடிலெய்டு மைதானத்தில் கோலி ஆடி வருவதை குறிப்பிட்டு ரசிகர்கள் பலரும் தோனி கணித்தது நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்றே தெரிவித்தும் வருகிறார்கள். தோனி அப்போது பேசி இருந்த வீடியோ, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.