காலில் விழுந்த ஜனனி… ‘நீ தப்பே பண்ல’ – கதறி அழுத குயின்ஸி.! பெருசான துண்டு பிரச்சனை.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இதில் நள்ளிரவில் குயின்ஸியின் டவலை எடுத்துக்கொண்டு ஜனனி வருகிறார். அப்போது குயின்ஸி நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு மைனா, மகேஸ்வரி, ரச்சிதா என பலரும் அமர்ந்திருக்க, அங்கு வந்த ஜனனியின் கையிலிருந்த துண்டை பார்த்து குயின்ஸி, அது என்னுடைய துண்டு அதை பயன்படுத்தினாயா என்று கேட்கிறார். இதற்கு ஜனனி, நான் பயன்படுத்தவில்லை.. நான் அதை எடுக்கவில்லை, வேட்டியால்தான் துவட்டினேன் என்கிறார். ஆனால் கையிலிருந்த துண்டை பார்த்து நான் குழம்பி விட்டேன் என்று குயின்ஸி கூறுகிறார். மேலும் தான் துவட்டுவதற்கு வைத்திருந்த டிரெஸ்ஸை எடுப்பதை தான் விரும்புவதில்லை அதனால் அவ்வாறு கேட்டதாகவும், ஆனால் ஜனனியின் சூழ்நிலையை தான் பின்னர் புரிந்துகொண்டதாகவும் கூறிவிட்டார்.
அதன்பிறகு ஜனனி கோபமாக இருக்கிறார். அவரிடம் விசாரித்த தனலட்சுமி இதுகுறித்து குயின்ஸியிடம் கேட்க குயின்ஸி, ஜனனியிடம், நான் நீ எடுத்தது குறித்து கோபப்படவில்லை. நீ எந்த சூழ்நிலையில் டவலை எடுத்தாய் என்று எனக்கு தெரியாது. ஆனால் என் அப்பா அம்மாவே என்னுடைய டவலை பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் நான் அப்படி சொன்னேன். இனி நீ என் பொருள் எதை எடுத்தாலும் நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டு செல்கிறார். இதனிடையே ஜனனியும் நான் இனி உன்னுடைய பொருள் எதையும் எடுக்க மாட்டேன் மன்னித்துவிடு என்று சொல்லின் குயின்ஸியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.
அதன்பிறகு ஜனனி கோபமாக காபி கப்பை போட்டு உடைத்துவிட்டு, தெரியாமல் தானே எடுத்தேன் என சொல்லி கத்துகிறார். மீண்டும் குயின்ஸி, நியாயமாக நான் தான் இதற்கு கோபப்பட வேண்டும், ஆனால் நான் உன் மீது எந்த கோபமும் இல்லை என்று சொல்லிவிட்டேன். நீ எதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கிறாய்? என்று கூற, இதற்கு தனலட்சுமி குயின்ஸியிடம், ஜனனி ஆடை இல்லாத சூழ்நிலையில் அதை எடுத்துவிட்டாள், அவளிடம் சென்று என் அப்பா, அம்மாவே என் துண்டை எடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா? ஒருவர் அந்த சூழ்நிலையில் எடுத்து விட்டால் விட்டுவிட வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு குயின்ஸியோ, நான் அவள் மீது கோபப்படவில்லை, எதுவுமே சொல்லவில்லை என்று தானே சொல்கிறேன் என்கிறார். மீண்டும் தனலட்சுமி, ‘இருப்பினும் அத்தனை பேர் முன்னிலையில் நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு ஜனனியிடம் அப்படி கேட்டது தவறு’ என்று வாதிடுகிறார். இப்படி இவர்களின் சண்டை இரவு முழுவதும் நீடித்தது.
அதன் பின்னர் குயின்ஸி நீச்சல் குளத்தில் இருந்தபடி அத்தனை பேர் முன்னிலையிலும் தம்மை அப்படி கேட்டது தமக்கு கஷ்டமாக இருந்ததாக தனலட்சுமியிடம் கூறிக்கொண்டிருந்தார். இதேபோல், நிவாஷினியிடம் நடந்ததையெல்லாம் கூறிய குயின்ஸி, “அவள் செய்ததை ரியலைஸ் பண்ணாமல் நான் நீச்சல் குளத்தில் இருந்தபடி அத்தனை பேர் முன்னிலையிலும் என் டிரெஸ்ஸை எடுத்துவிட்டாயா என கேட்டது ஹர்ட் ஆனதாக சொல்லி காலில் விழுகிறாள். அது தப்பா இருக்கும். அதனால் நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டு என சொன்னேன். தனலட்சுமியும் அவளுக்கு ஆதரவாக பேசினார். ஆனால் இந்த விஷயம் இப்போது இப்படி எடுத்து செல்லப்படுவது கஷ்டமா இருக்கு” என அழுகிறார்.
கருத்துக்களேதுமில்லை