“என் Life-லயே இப்படி நடந்ததில்ல..”.. மகாலட்சுமி செயலால் க்யூட்டாக புலம்பிய ரவீந்தர்.!

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.

குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்று இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர். கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் ரவீந்தர் திருமணம் செய்து கொண்டார்.

 

திருமணத்துக்கு பிறகு பிஹைண்ட்வுட்ஸ் பேட்டி ஒன்றில் பேசும்போது மகாலட்சுமி, “எனக்கு அவர் இப்படி இருப்பது பிரச்சனையாக தோன்றவில்லை. எனக்கே ஏதும் தோன்றாத போது, நீங்கள் ஏன் அதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் அவரிடம் கேட்பேன். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே எனக்கு பிடிக்கும். அவ்வளவு தான். உடம்பை குறைப்பதற்கான முயற்சிகள் பற்றி என்னிடம் சொல்வார். நான் அப்படி எதையும் செய்து விட வேண்டாம் என்று தான் கூறுவேன். உடல் ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும்” என்றார்.

 

பின்னர் அவ்வப்போது தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர், சோஷியல் மீடியாவில் பகிர்ந்தும் வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் ரவீந்தர் பகிர்ந்தார். மேலும், “ஒரு மாத Anniversary. எங்களை பார்த்து சிரிக்க மக்களுக்கு 100 காரணங்கள் இருக்கும். ஆனால், எனது சந்தோசத்திற்கு ஒரே ஒரு காரணம் தான். அது நீ. லவ் யூ “முயலு” என ரவீந்தர் குறிப்பிட்டிருந்தார்.

 

இதில், கமெண்ட் செய்த மகாலட்சுமி, “ஹாப்பி Anniversary அம்மு. எனது மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் தான். லவ் யூ டூ மேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்தான் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி சமையல் குறித்த க்யூட்டான புகைப்பட பதிவை பகிர்ந்துள்ளார். அதில் வேகவைத்த முட்டை கருகியிருப்பதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர், “என் வாழ்க்கையிலேயே முட்டை இந்த நிலைக்கு கருகி போனதை நான் பார்த்ததில்லை. மகலாட்சுமி நிச்சயமாக என் எடை குறைய வைத்துவிடுவார். புது வாழ்க்கை. புதுமனைவி.. சூப்பர் சமையல்” என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.