வாட்ஸ் அப் இல் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்..! மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிவித்தல்

வாட்ஸ்அப் 

உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணையும் புதிய அம்சமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும் இதுவரை வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய அம்சத்தில் 1024 உறுப்பினர்கள் வரை இணையலாம் என்று மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

கம்யூனிட்டிஸ்” என்ற புதிய வசதி

 

 

வாட்ஸ் அப் இல் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்..! மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிவித்தல் | New Important Futures For Whatsapp Users

இதனை தவிர “கம்யூனிட்டிஸ்” என்ற புதிய வசதியையும் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது வாட்ஸ் அப்பில் குரூப் உரையாடல்களை ஒழுங்கமைக்க, பயனர்கள் பல குழுக்களை “கம்யூனிட்டிஸ்” கீழ் இணைக்க முடியும்.

இவை அனைத்தும் “என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன்” மூலம் பாதுகாக்கப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.

இந்தப் புதிய அம்சங்கள் உலகளவில் விரைவில் வெளியிடப்படும் எனவும், அவை அடுத்த சில மாதங்களில் அனைவருக்கும் கிடைக்கும் எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.