இலங்கையில் தங்கத்துக்கான கேள்வி குறைந்து விலையும் குறைந்துள்ளது
இலங்கை தங்கச் சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 156,000 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 169,000 ரூபாவாகவும் குறைந்துள்ளன.
எட்டு மாதங்களுக்குப் பிறகு பதிவான குறைந்த விலை இதுவாகும் என கொழும்பு செட்டியார்தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தங்கத்தின் தேவை குறைவடைந்துள்ளமையினால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள பல நகைக்கடைகளை மூடும் போக்கு காணப்படுவதாகவும் செட்டியார்தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை