Ranjithame : ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ முதல் வரி இதான்ப்பா..! விஜய் குரலில் வெளியான ‘வாரிசு’ பட பாடல்.. Varisu
வாரிசு படத்தில் இருந்து நடிகர் விஜய் பாடி உள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகியுள்ளது.
Varisu First Single Ranjithame is Out Thalapathy Vijay Rashmika
நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி இருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜூ மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இப்படத்திற்கு, ஹரி, ஆஷிஷோர் சாலமன் மற்றும் விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ்.தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலான் “ரஞ்சிதமே” பாடலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையிலான இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
‘கட்டுமல்லி கட்டிவெச்சா.. வட்டக்கருப்பு பொட்டுவெச்சா’ என தொடங்கும் இந்த பாடலின் பல்லவி, ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே’ என அனுபல்லவியில் சென்று கலக்கிறது. தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். அவருடன் இணைந்து இந்த பாடலை எம்.எம்.மானஸி பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார்.
தமிழில் ஒஸ்தி, காஞ்சனா என பல படங்களுக்கு இசையமைத்த தமன், பாய்ஸ் திரைப்படத்தில் 5 பாய்ஸில் ஒருவராக நடித்திருப்பார். தெலுங்கிலும் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வரும் எஸ்.தமன், தற்போது வாரிசு திரைப்படத்துக்கு இசையமைத்திருப்பது விஜய் மற்றும் தமன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை