வீதி புனரமைக்க நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு அங்கஜன் எம்.பி நன்றி பாராட்டு.
வட்டுக்கோட்டை-பொன்னாலை வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் மேலும் தெரிவிக்கையில்;
வட்டுக்கோட்டை -பொன்னாலை வீதியின் புனரமைப்பு தொடர்பாக அண்மையில் யாழ் வந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களிடம் வலியுறுத்தியிருந்தேன்.இந்நிலை யில் குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் 5.4 மில்லியன் ஒதுக்கீட்டில் 04/11 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை-பொன்னாலை வீதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து வீதியை விரைவாக செப்பனிட நடவடிக்கை எடுத்த துறை சார் அமைச்சர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு மனமார்ந்த நன்றிகள்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை