வைத்தியசாலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 130 ஆண்டுகள் பழமையான சுரங்கப்பாதை (படங்கள்)
மும்பை ஜே ஜே வைத்தியசாலை வளாகத்துக்குள் 130 ஆண்டு பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் இதன் நீளம் 220 மீற்றர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மருத்துவர் ஒருவர் இந்த சுரங்கப்பாதையை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
தொல்லியல்துறை ஆய்வு
தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதை ஆய்வு செய்தபோது இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் உள்ள அடிக்கல்லில் 1890 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொல்லியல்துறை நிபுணர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை