மேற்கு ஆப்ரிக்காவில் சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்..! சிக்கித்தவிக்கும் இந்திய மாலுமிகள்

கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக சென்ற கப்பல் கினியா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்ரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நோர்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றது.

இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் அக்கப்பலில் இருந்தனர். நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன.

இந்திய மாலுமிகள்

மேற்கு ஆப்ரிக்காவில் சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்..! சிக்கித்தவிக்கும் இந்திய மாலுமிகள் | Indian Sailors Arrested On Crude Oil Ship

அவற்றுடன் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலும் எண்ணெய் ஏற்ற காத்திருந்தது. அப்போது கடல் கொள்ளையர்களின் கப்பல் அந்த வழியாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இந்திய மாலுமிகள் கப்பலை பாதுகாப்பான பகுதி நோக்கி செலுத்தினர். அப்போது அங்கு வந்த கினியா கடற்படை கப்பல், இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை தடுத்து நிறுத்தியது.

பின்னர் அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரையும் சிறைபிடித்தனர். நோர்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

மீட்கும் பணி

மேற்கு ஆப்ரிக்காவில் சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்..! சிக்கித்தவிக்கும் இந்திய மாலுமிகள் | Indian Sailors Arrested On Crude Oil Ship

அவர்கள் கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இந்திய மாலுமிகளும் சிறை பிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கினியா நாட்டுடன் பேசி இந்திய மாலுமிகளை மீட்கும் நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.