மில்லியன் கணக்கான கனேடியர்களுக்கு கிடைக்கவிருக்கும் உதவித் தொகை
கனடாவில் வரி செலுத்தும் அனைவருக்கும் GST credit என்ற பெயரில் வரி இல்லாத ஊக்கத்தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிவரும் நாட்களில் 11 மில்லியன் தனி நபர்களின் வங்கி கணக்குகளில் அல்லது அஞ்சல் பெட்டியில் இந்த தொகையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த முறை, புதிய விதிகளின் அடிப்படையில் இருமடங்கு தொகை அளிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த $2.5 பில்லியன் GST credit திட்டத்தால் 11 மில்லியன் தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் பயனடைவார்கள் என்று பெடரல் அரசு கூறுகிறது. வரி செலுத்தும் அனைவரும் இந்த GST credit திட்டத்தால் பயன்பெறலாம்.
மேலும், உங்கள் நிகர வருமானம், திருமண நிலை மற்றும் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளது என்பதைப் பொறுத்து ஜிஎஸ்டி கிரெடிட்டுக்கான தொகை மாறுபடுகிறது. தனி நபர் என்றால் 234 டொலர் தொகையை பெறலாம்.
ஒரு குழந்தை இருப்பவர்களுக்கு 387 டொலர். இரு பிள்ளைகள் என்றால் 467 டொலர், மூன்று பிள்ளைகள் என்றால் 548 டொலர், நான்கு பிள்ளைகள் என்றால் 628 டொலர் பெற முடியும்.
மேலும், திருமணமானவர்கள் அல்லது சட்டப்பூர்வ துணையுடன் வாழ்பவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என்றால் 306 டொலரும், ஒரு பிள்ளை என்றால் 387 டொலரும், இரு பிள்ளைகள் என்றால் 467 டொலரும், மூன்று பிள்ளைகள் என்றால் 548 டொலரும், நான்கு பிள்ளைகள் என்றால் 628 டொலரும் அளிக்கப்படுகிறது.
நவம்பர் 4ம் திகதி முதல் முதல்கட்டமாக ஜிஎஸ்டி கிரெடிட்டுக்கான தொகை அளிக்கப்படுகிறது. இருப்பினும், தகுதியானவர்களின் வங்கி கணக்கு அல்லது தபால் மூலம் கிடைப்பதற்கு சில நாட்கள் தாதமதாகலாம் என்றே கூறப்படுகிறது. இரண்டாவது தவணை ஜனவரி 5ம் திகதி முதல் அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை