அரையிறுதிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்..! மண்ணை கவ்வியது பங்களாதேஷ்
அரையிறுதி
உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியின் குரூப் B யில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 54 ஓட்டங்களையும், அபிஃப் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் அணி
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவு செய்தது.
பாகிஸ்தான் அணியில் மொஹமட் ரிஸ்வான் 32 புள்ளிகளையும், மொஹமட் ஹரிஸ் 31 புள்ளிகளையும் பெற்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை