நீங்கள் எங்கள் பொக்கிஷம் ‘இந்தியன் 2’ கெட்டப்பில் கமல் இருக்கும் மிரட்டல் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய ஷங்கர்!
நடிகர் கமல்ஹாசன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இந்தியன் 2 படக்குழு சார்பாக, மிரட்டலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பேசக்கூடிய படங்களில் ஒன்றாக உள்ளதால், இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனை வைத்தே இரண்டாம் பாகம் எடுக்க முற்பட்டார் இயக்குனர் ஷங்கர்.
அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் மேடையில் வைத்தே இந்த படத்தை கமல் உறுதி செய்தார். ‘இந்தியன் 2’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் கழித்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கியது.
Indian 2
அதன் படி இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க கமிட் ஆனார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திர கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ், ஜெயப்ரகாஷ் போன்ற பலர் நடித்து வருகிறார்கள்.
மிகவும் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், ராட்சத கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்து, கமலுக்கு ஏற்பட்ட மேக்கப் அலர்ஜி போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆகிக்கொண்டே சென்றது. ஒரு நிலையில் இந்த படத்தை டீலில் விட்டு விட்டு, நடிகர் ராம் சரணின் படத்தை இயக்கும் பணிகளில் இறங்கினார் ஷங்கர்.
கருத்துக்களேதுமில்லை