கனடாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்த நிறுவனம்: கூறப்படும் காரணம்
வார இறுதியில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் விமானங்கள் தாமதப்படவோ ரத்து செய்யவோ அதிக வாய்ப்பிருப்பதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஸ்டம் செயலிழந்ததன் விளைவாகவே விமானங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போது பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாகவும், சிறு தடங்கல் மட்டும் நீடிப்பதாகவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியத்திற்கு மேல் சிஸ்டம் செயலிழந்ததாகவும், ஆனால் அதன் பின்னர் அது திரும்பவில்லை எனவும் கூறுகின்றனர்.
இதனால் சனிக்கிழமை மட்டும் 144 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஞாயிறன்று 100 விமானங்கள் ரத்தானதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சிக்கல் முடிவுக்கு வர எத்தனை நாட்களாகும் என்ற கேள்விக்கு உறுதியான பதில் அளிக்க நிர்வாகிகள் தரப்பு மறுத்துள்ளது.
திடீரென்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுமார் 6,500 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் மறு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அவர்களுக்காக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, விமானங்கள் ரத்தான தகவல் பயணிகளுக்கு உரியமுறையில் தெரிவிக்கப்படவில்லை எனவும், பெரும்பாலானோர் சமூக ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை