அமெரிக்காவில் இலங்கையர் விபத்தில் மரணம்

அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தில் கார் மீது ரயில் மோதியதில் இலங்கையர் ஒருவர் பலியானதுடன் அவருடன் காரில் பயணித்த மற்றோரு இலங்கையர் உயிர் தப்பினார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Edna நகரத்தில் வசித்து வந்த இலங்கையரான 45 வயது நாலக மனோஜ் சில்வா கவிரத்னா (Nalaka Manoj Silva Kavirathna), மற்றும் ஒரு இலங்கையர் சென்ற கார் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கையர் சென்ற கார் மீது ரயில் மோதி விபத்து

இந்த சம்பவம் விக்டோரியா மாகாணத்தின் Inez நகத்தில், உள்ளூர் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12.20 மணியளவில் நடந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இருவரும், 2013 Nissan Versa காரில் வடகிழக்கு திசையில் Farm-to-Market Road 444 சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

அமெரிக்காவில் இலங்கையர் விபத்தில் மரணம் | Sri Lankan Dies In Us Accident

ஓட்டிச் சென்ற கார் திடீரென ரயில் தண்டவாளத்தில் தடைப்பட்டது

 

கவிரத்னா வாகனைத்தி ஓட்டிச் செல்லும் போது அந்த கார் திடீரென ரயில் தண்டவாளத்தை கடக்கும் நேரத்தில் நடுவில் நின்றுள்ளது. அந்நேரத்தில் தண்டவாளத்தில் ரயில் வேகமாக வந்து ஓட்டுநர் பக்கத்தில் மோதியது.

மோதிய பேகத்தில் கார் தூக்கி வீசப்பட்டு அருகில் ஒரு பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் கார் சாரதியான நாலக மனோஜ் சில்வா கவிரத்னா சம்பவ இடத்திலேயே 12:27 மணியளவில் உயிரிழந்ததாக்க பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் இலங்கையர் விபத்தில் மரணம் | Sri Lankan Dies In Us Accident

 

மற்றோரு இலங்கையர் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் யார் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.