ஐ.எம். எவ் உடனான பேச்சு தோல்வி – கடன் கிடைப்பதில் சிக்கல்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த கடன் உதவி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தாமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் அடுத்த சந்திப்பு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும் கால தாமதம் ஏற்படலாம்

ஐ.எம். எவ் உடனான பேச்சு தோல்வி - கடன் கிடைப்பதில் சிக்கல் | Negotiations With Creditors Failed

 

அதுவரையான காலப்பகுதியினுள் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், அதன் முன்னேற்றத்தை இந்த சந்திப்பில் அறிவித்து,அனுமதியைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இடம்பெறாவிடின், இந்த உதவித் தொகையைப் பெறுவதில் மேலும் கால தாமதம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.