உக்ரைனில் பேரிழப்பு – போர் உத்திகளை மாற்றகோரி புடினிடம் கதறும் ரஷ்ய கடற்படை
உக்ரைன் போரில் இராணுவ மூலோபாயத்தை மாற்றியமைக்குமாறு ரஷ்ய கடற்படையினர் அதிபர் புடினுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், இந்த போர் நடவடிக்கை ஆண்டு கணக்கில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்துள்ள இந்த போர் நடவடிக்கையில் சுமார் 75000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பெருகிவரும் இழப்புகள்
இந்நிலையில் ரஷ்யாவுடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் உள்ள ரஷ்ய கடற்படையினர் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய சார்பு பத்திரிகையாளர் அலெக்சாண்டர் ஸ்லாட்கோவ் இன்று டெலிகிராம் சனலில் தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார், அதில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் பாவ்லிவ்காவில் உள்ள ரஷ்ய கடற்படையினர் பெருகிவரும் இழப்புகள் குறித்து முறையீடு செய்துள்ளனர்.
போர் உத்திகள் மறுபரிசீலனை
மேலும் உக்ரைனில் உள்ள ரஷ்ய கடற்படையினரின் உத்திகளை மறுபரீசிலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள ப்ரிமோர்ஸ்கி க்ராய் பிராந்தியத்தின் ஆளுநரான ஒலெக் கோசெமியாகோவுக்கு ரஷ்ய கடற்படையினர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் தங்களுக்கு சார்பாக செயல்படுமாறும்,அதிபர் புடினின் உத்திகளை மாற்றிக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை