அட.. ரஞ்சிதமே பாடலை பாடியது இவங்கதானா – சுடச் சுட தகவல்கள்!
ரஞ்சிதமே
விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான ரஞ்சிதமே பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் நீடித்து வருகிறது. யூடியூப்பில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், பாடல் பாடியவரின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இப்பாடலை பாடிய மானசி இந்துஸ்தானி பின்னணி பாடகியாவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் சுமார் 170 பாடல்களை பாடியுள்ளார்.
மானசி
2013ல் தெலுங்கு பாடல் மூலமே அறிமுகமானார். தொடர்ந்து தமிழில், அன்னக்கொடி திரைப்படத்தில் ஜிவி பிரகாஷூடன் இணைந்து முதல் பாடலை பாடினார். காக்கி சட்டை படத்தில், கட்டிக்கிடும் முன்னே, தாரை தப்பட்டை படத்தில், ஆட்டக்கார மாமன் பெண்ணு பாடலையும் பாடியுள்ளார்.
மேலும், பல முன்னணி நடிகைகளுக்கு பிண்ணணிக் குரல் கொடுத்துள்ளார். சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், த்ரிஷா, நயந்தாரா, ஹன்சிகா என பலர் அடங்குவர். தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.
கருத்துக்களேதுமில்லை