பிரபல நடிகை கவலைக்கிடம் – அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல நடிகை ஜந்த்ரிலாக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜந்த்ரிலா சர்மா
வங்காள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜந்த்ரிலா சர்மா. இவர் ஏற்கனவே இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஹவுராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் அறிக்கையில்,
கவலைக்கிடம்
அவரது மூளையில் பல கட்டிகள் இருப்பதாகவும் இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது கோமாவில் உள்ள அவரை தொடர்ந்து வென்டிலேட்டரில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் விரைவில் குணமடைய திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்
கருத்துக்களேதுமில்லை