பாலியல் குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர தனுஷ்கவிடம் ஒரு இலட்சம் டொலர் கேட்கும் பெண்

100,000 அவுஸ்திரேலிய டொலர்களை கேட்கும் பெண்

தற்போது அவுஸ்திரேலிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளார்.

ஆனால் தனுஷ்க குணதிலக்க தரப்பு இணக்கம் தெரிவிக்காமையால் 25,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

பாலியல் குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர தனுஷ்கவிடம் ஒரு இலட்சம் டொலர் கேட்கும் பெண் | Dhanushka Woman Asks One Lakh Dollars To Settle

தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு, குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நீதிமன்றில் நிரூபிக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இது போன்ற இளம் பெண்கள், ‘டேட்டிங் ஆப்’ மூலம், பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், இந்த வழியில் பணம் சம்பாதிப்பதும் ஒரு பழக்கமாக இருப்பது தெரியவந்துள்ளது. தனுஷ்க குணதிலக்கவின் வழக்கும் இது போன்றது, எனவே அவர் அதை சட்டத்தின் மூலம் சமாளிக்க முடிவு செய்துள்ளார்.

 

10 மாதங்களுக்கு மேலாகும்

எவ்வாறாயினும், தற்போது தனுஷ்க குணதிலக்க சிறையில் இருப்பதாகவும் அவுஸ்திரேலியாவின் சட்ட விவகாரம் முடிவடைய 10 மாதங்களுக்கு மேலாகும் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், பெண் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.