ஜனாதிபதி ரணில் விசிக்கிரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் – ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு போன்றவற்றை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளை தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு ஓரளவு இயல்பு நிலை திரும்புவதற்கு ஜனாதிபதி விக்ரமசிங்க ஆற்றிய பங்களிப்பை பொது மக்களும் அங்கீகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான பதிலை வழங்காவிட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல அரசாங்கங்களின் கீழ் பணியாற்றியதன் மூலம் தமக்கு புதியவர் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.