ஜெனிவா செல்லும் நிலைக்கு தள்ளாதீர் -அரசுக்கு மனோ கணேசன் எச்சரிக்கை

நமது பிரச்சினைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு சென்று பேச எனக்கு விருப்பமில்லை. ஆனால், என்னை அந்த நிலைமைக்கு தள்ளி விட வேண்டாமென அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

நாட்டில் நலிவடைந்த பிரி வினர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசாநாயக்க, தமிழ் முற் போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு பிரேரணையை வழிமொ ழிந்து உரையாற்றிய தமிழ் முற் போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

மூன்று வேளையும் உண்ட மக்கள்

ஜெனிவா செல்லும் நிலைக்கு தள்ளாதீர் -அரசுக்கு மனோ கணேசன் எச்சரிக்கை | Don T Rush To Geneva Mano Ganesan Warns

இந்நாட்டில் நாம் 1958, 1977, 1983 கால கட்டங்களில் இனவாத கலவரங்களை பார்த்துள்ளோம். 1971, 1988, ஆண்டுகளில் தெற்கில் ஆயுதப் போரையும் பார்த்துள்ளோம். 2004 இல் சுனாமி அழிவை பார்த்துள்ளோம். அதன் பின் 30 ஆண்டுகால போருக்கு முகம் கொடுத்துள்ளோம். எதுவாக இருந்தாலும், இன்றைய நிலைமையைப் போல்,எக்காலத்திலும் நமது மக்கள் நெருக்கடியை சந்திக்கவில்லையென எண்ணுகிறேன். எக்காலத்திலும் மக்கள் எப் படியாவது மூன்று வேளையும் சாப்பிட்டனர். பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி வாழ்ந்தனர். இந்த காலத்தில்தான் இப்படி மிகவும் மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றனர்.

தோட்ட தொழிலாளர்களே அதிகளவில் பாதிப்பு

ஜெனிவா செல்லும் நிலைக்கு தள்ளாதீர் -அரசுக்கு மனோ கணேசன் எச்சரிக்கை | Don T Rush To Geneva Mano Ganesan Warns

நாம், இன்று இந்த யோசனையை கொண்டு வந்ததன் நோக்கம், இந்த நெருக்கடிக்குள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிவாரணங்களை ஏற்பாடு செய்யுங்களென்ற கோரிக்கையின்படியேயாகும். அது, அரசின் கடப்பாடு மட்டுமல்ல,அரசின் கடமையுமாகும். எதிரணி என்ற முறையில் நாம் அதை அரசுக்கு எடுத்து கூறக் கடமைப்பட்டுள்ளோம். இன்று, இந்நாட்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, துன்புறும், நலிவுற்ற பிரிவினர், தோட்ட தொழிலாளர்களென்பதை நான் அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். இடதுசாரி தலைவர் என்பதால் இது உங்களுக்கு நன்கு தெரியும். இதை நாம் எப்போதும் சொல்லி வந்தோம். இதை,யாரும் கவனத்தில் பெரும்பாலும் எடுக்கவில்லை.

இன்று உலகம் சொல்ல ஆரம்பித்து விட்டது. இன்று ஐ.நா அமைப்புகள் கூறுகின்றன. ஐ.நா உணவு விவசாய ஸ்தாபன விசேட அறிக்கையில் என்ன கூறப் பட்டுள்ளது? இந்நாட்டில், அதிகூடிய உணவின்மையால், அதிகம் பெண் தொழிலாளர்களே பாதிக் கப்பட்டுள்ளதாக கூறுகிறது. தோட்டப்புறத்தில் பெண்கள் மேலதிக சுமையை சுமந்து குடும்பங்களை நடத்துகின்றனர்.

சிறுபான்மை தமிழர்கள்

ஜெனிவா செல்லும் நிலைக்கு தள்ளாதீர் -அரசுக்கு மனோ கணேசன் எச்சரிக்கை | Don T Rush To Geneva Mano Ganesan Warns

அதேவேளை உலக உணவு நிறுவனம், தோட்டப்புறங்களில் உணவின்மை 51 வீதமென கூறுகிறது. நகரப் பகுதிகளில் 43 வீதமும், கிராம பகுதிகளில் 34 வீதமும் என கூறுகிறது. இந்த உணவின்மை என்பது அதிபர், தினந்தோறும் பேசும் ஒரு விஷயம் ஆகும். நான் சொன்னது போன்று, மூன்று வேளை உணவு என்பது, இன்று இரண்டு வேளை ஆகிவிட்டது. இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் இன்று ஒருவேளை தான் சாப்பிடுகிறார்கள். அது அதிகம் நிகழ்வது இங்கேதான். இதை நாம் கூறுவதை விட, ஐ.நா இன்று கூறுகிறது. உலகம் கூறுகிறது என்பதை அரசாங்கம் அறிய வேண்டும்.

அது மட்டுமல்ல, ஐ.நா வின் நவீன அடிமைத்துவத்துக்கான அறிக்கையாளர் டோமாயா ஒபகாடா, சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு வின் அவைக்கு அறிக்கை சமர்ப்பித் துள்ளார். இலங்கையில் பெருந்தோட்டங்க ளில் காணப்படும் ஒடுக்கு முறைக்கு பின்னால் இனத்துவ காரணம் இருக்கிறதென கூறுகிறார். பெருந்தோட்ட மக்கள் எதிர் நோக்கும் துன்பங்களுக்கு காரணமாக அவர்கள் தொழிலாளர் என்பதை விட, அவர்கள் சிறுபான்மை தமிழர்கள் என்ற காரணமும் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.