கெர்சன் நகருக்கான ரஷ்யா நியமித்த துணை ஆளுநர் கொல்லப்பட்டார்
ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் நகருக்கான துணை ஆளுநர் Kirill Stremousov கார் விபத்தில் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர் Kirill Stremousov , 45, துணை ஆளுநராக ரஷ்யாவால் நியமிக்கப்பட்டார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பின் முக்கியமான ஆதரவாளர்
அவர் ரஷ்ய ஆக்கிரமிப்பின் மிக முக்கியமான ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார் மற்றும் சமூக ஊடகங்களில் ஆக்கிரோஷமான அறிக்கைகளை வெளியிடுவதால் நன்கு அறியப்பட்டார்.
அவர் உக்ரைன் காவல்துறையால் தேசத்துரோக குற்றத்திற்காக தேடப்பட்டார். கெர்சனின் ஆளுநராக ரஷ்யாவால்-நியமிக்கப்பட்ட Vladimir Saldo அவரது துணை கொல்லப்பட்டதை உறுதி்ப்படுத்தினார்.
உக்ரைனிய அதிகாரிகள் சந்தேகம்
ஆனால் உக்ரைனிய அதிகாரிகள் இது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் தென்கிழக்கில் உள்ள கெர்சன் நகருக்கும் ஆர்மியன்ஸ்க் நகருக்கும் இடையிலான சாலையில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை