மகசின் சிறை கைதி தண்ணீர் தொட்டி மேலிருந்து விழுந்து உயிரிழப்பு
தண்ணீர் தொட்டிக்கு மேல் நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்த மகசின் சிறைகைதி தொட்டியின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான குறித்த நபருக்கு ஒன்றரை மாதகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த கைதி சிறைக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து உணவு உட்கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் தொட்டியின் மேலிருந்து விழுந்த கைதியை
சிறை அதிகாரிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதித்தபோது அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். .
இவ் மரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
கருத்துக்களேதுமில்லை