முகக் கவசங்களை அணியுமாறு கனேடிய அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை
முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறு கனேடிய அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளக கட்டடங்களில் மக்கள் முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமென மத்திய அரசாங்க அதிகாரிகள் கோரியுள்ளனர்.
கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கோவிட்19 நிலைமை குறித்து தகவல் வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றுதல் அல்லது முக கவசம் அணிதல் போன்ற ஏதாவது ஒரு சிலவற்றை மட்டும் செய்யாது அனைத்து விதமான நடைமுறைகளையும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட்19 நோய்த் தொற்றுக்கு மட்டுமன்றி ஏனைய தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகள் மற்றும் சளிக்காய்ச்சல் தடுப்பூசிகள் என்பனவற்றை ஏற்றிக் கொள்ளுமாறு டொக்டர் திரேசா டேம் கோரியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை