பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் தூக்கி எரிந்திடுங்க! அசுப பலன்களை கொடுக்குமாம்

இந்து மதத்தின் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது வீட்டின் பூஜை அறை. ஆன்மீகத்தின் முக்கியமாகவும், குடும்பம் சுபிக்ஷமாக இருப்பதற்கு பூஜை நம் வீட்டின் பூஜை அறையில் சில பொருட்களை வைத்திருப்போம்.

ஆனால் அவை அனைத்தும் வாஸ்து பலன் பார்த்தே நீங்கள் வைக்க வேண்டும். ஆம் வாஸ்து சாஸ்திரத்தின் படி பூஜை அறையில் வைக்கக்கூடாத பொருட்கள் சில உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்து கொண்டு பூஜை அறையில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள்.

பூஜை அறையில் இருக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன?

முதலாவதாக பூஜை அறையில் கிழிந்த புத்தகங்கள் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு இருந்தால் அதனை உடனே அப்புறப்படுத்தி ஆற்றில் விட்டுவிடவும்.

இந்து மதத்தில் மிகவும் புனிதமாக பார்க்கப்படுவது அரிசியாகும். இவ்வாறான அரிசிகளில் உடைந்த அரிசிகளை பூஜை அறையில் வைக்க வேண்டாம். அவ்வாறு இருந்தால் அவற்றினை எடுத்துவிட்டு முழு அரிசியை வைக்க வேண்டும்.உக்கிரமாக இருக்கும் தெய்வ சிலைகள் வீட்டின் பூஜை அறையில் நிச்சயம் இருக்கவே கூடாது. இவை வீட்டில் துர்பாக்கியத்தை உண்டாக்குவதோடு, துரதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் தூக்கி எரிந்திடுங்க! அசுப பலன்களை கொடுக்குமாம் | Vastu Tips Pooja Hall Avoid Some Things

அதே போன்று சிலர் இறந்த முன்னோர்களின் புகைப்படத்தினை பூஜை அறையில் வைத்து வணங்குவர். அவ்வாறு செய்வதால் அசுப பலன்கள் ஏற்படும் என்பதை மறந்து விடாதீரகள்.

பூஜை அறையில் சிலைகள் வைத்து வழிபடுபவராக நீங்கள் இருந்தால், இதனை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறையில் சிலைகள் உடைந்து இருந்தால் உடனே வெளியே தூக்கி ஆற்றில் போட்டுவிடுங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.